புதுக்கோட்டை அருகே காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது காதலிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறி, தானே முன்வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார் காதலன். (இது காதலன் நாகராஜ் காவல் நிலையத்தில் தெரிவித்த  தகவல் மட்டுமே....நடந்த உண்மை சில  நாட்களுக்கு பின்னே தெரிய வரும் )

காதலன் காவல் நிலையத்தில் சரண்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்துள்ளது குலமங்கலம் வடக்கு கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான கஸ்தூரி என்ற இளம்பெண் நர்சிங் படித்துள்ளார். இவர் ஆலங்குடியில் உள்ள மருந்துக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடைக்கு எதிரில் உள்ள நிறுவனத்தில் அதிரான்விடுதி என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது நாகராஜன் டாட்டா ஏஸ் வாகனத்தின் டிரைவராக உள்ளார்.

இதற்கிடையே, கஸ்தூரிக்கும் நாகராஜனுக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. நீண்ட காலமாக காதலித்து வந்த இவர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணிக்கு அளவில் வெளியில்,தனிமையாக செல்ல திட்டமிட்டு  உள்ளனர்.

இதற்காக  காதலி கஸ்தூரியும் காதலன் நாகராஜனும் டாட்டா ஏஸ் வண்டியில் மாங்காடு தைல மர காட்டிற்குள் சென்று உல்லாசமாக இருந்துள்ளதாக  கூறப்படுகிறது.

அப்போது காதலி கஸ்தூரிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும்,  உடனடியாக குடிக்க தண்ணீர் கேட்டதகவும் கூறி உள்ளார்.  உடனே காதலன் நாகராஜன் தண்ணீர் கொடுத்தாராம். தண்ணீரை குடித்த கஸ்தூரி சற்று நேரத்திலேயே மரணமடைந்ததாக அவர் தெரிவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் நாகராஜ், கஸ்தூரி உடலை வண்டியில் ஏற்றி அம்புலியாறு அதிராம்பட்டினம் என்ற ஊரின் அருகே உள்ள அம்புளி ஆற்றின் கீழே உள்ள பாலத்தின் அடியில் போட்டுவிட்டு சென்னைக்கு செல்ல முடிவெடுத்து இருந்தாராம்.

 

இதனை அடுத்து தன்னுடைய நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு, அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆலங்குடி காவல் நிலையத்தில் சரண் அடைந்து உள்ளார். இவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகராஜனை கைது செய்து கடும் தண்டனை விதிக்கக் கோரி இன்று காலை கீரமங்கலம்-அறந்தாங்கி சாலையில் பனங்குளம் மற்றும் பெரியாளுர் விளக்கு உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.