பாலியல் தொல்லையால் பெரம்பூர் ரேவதி ஜீவல்லரியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கமாரியப்பனின் மகள் தனலட்சுமி(17).இவர் சில நாட்களாக பெரம்பூரில் உள்ள ரேவதி ஜிவல்லரில் பணியாற்றி வந்துள்ளார்.அங்கு பணிபுரியும் சூப்பரைசரால் தொடர்ந்து  பாலியல் தொல்லை கொடுத்ததினால் தனலட்சுமி இறந்திருக்கலாம் என்று  கூறப்படுகிறது...

மேலும் அவர் மூன்றாவது அடுக்குமாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை எந்த காவல் துறைக்கும் அறிவிப்பு கொடுக்காமலும் அருகில் எத்தனையோ மருத்துவமனைகள் இருக்கும் பட்சத்தில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அதன் உரிமையாளரான பாபுவே கூறுகிறார்..

இதன் பின் இருக்கும்  மர்மம் என்ன..? திடீரென  அந்த பெண் தூக்கிட்டு தற்கொலை  செய்ய காரணம் என்ன..? என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது 

மேலும்  இது போன்ற,சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க குழந்தை தொழிலாளர் சட்டத்தின்  கீ்ழ்  தீவிர நடவடிக்கை பாய  வேண்டும் என்றும் இனி இது போன்று எங்கும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே இங்கு உள்ள சமூக ஆர்வாளரின் கருத்தாக உள்ளது ...இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா அல்லது விலைபோகுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.