Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் நின்ற இடத்திலேயே உயிர் இழந்த வளர்ப்பு யானை ஜமீலா..! காரணம் என்ன..?

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையத்தில் உள்ள காப்புக்காடு யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஜமீலா என்ற பெண் யானை உடல்நலக் குறைவால் நின்ற இடத்திலேயே அமர்ந்து பரிதாபமாக உயிரிழந்தது. 
 

A domesticated elephant died in Trichy due to ill health
Author
First Published Sep 18, 2022, 2:10 PM IST

வளர்ப்பு யானை உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த தனி நபரால் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 62 வயதான ஜமீலா என்ற பெண் யானை நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிறுகனூர் அருகே எம்.ஆர் பாளையத்தில் உள்ள காப்புக்காடு யானைகள் மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அலர்ஜி காரணமாக யானையின் வயிற்று பகுதியில் ஏற்பட்ட புண்ணானது யானையின் தும்பிக்கை மற்றும் கால்களுக்கு பரவியது. இதனால் உடலில் சீல் வைக்கப்பட்டு யானை உடல்நலம் மிகவும்  பாதிக்கப்பட்டது. 

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்..! தேர்வை ஒத்திவைக்க வேண்டும்,பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- ஓபிஎஸ்

A domesticated elephant died in Trichy due to ill health

அலர்ஜியால் யானை உயிரிழப்பு

இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி உத்தரவின்பேரில் கால்நடை மருத்துவ குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் உடல்நிலை மிக மோசமானதை தொடர்ந்து ஜமீலா யானை நின்ற இடத்திலேயே அமர்ந்தவாறு தனது உயிரிழந்தது.  உயிரிழந்த ஜமீலா யானையின் உடல்  திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண், துணை அதிகாரி சம்பத்குமார் முன்னிலையில் மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்த பின்னர். வன பகுதியில் ஜமீலா பெண் யானையின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜூலை மாதம் 26 வயதான ரோகிணி எனும் பெண் யானை உடல்நல குறைவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்.. நாளை முதல் பணிகள் தொடக்கம்.. அமைச்சர் தகவல்..

 

Follow Us:
Download App:
  • android
  • ios