a different kind of mosquito found in arani

ஆரணி அருகே அதிசய கொசுக்கள்...! டெங்கு பீதிக்கு நடுவே....கதிகலங்கும் மக்கள் ..!

தமிழகத்தை ஒரு உலுக்கு உலுக்கிய டெங்கு காய்ச்சலால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றனர்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல உயிரை வாங்கியது தான் கொசுவினால் ஏற்படும் டெங்கு.

இதன் காரணமாக சாதாரண காய்ச்சல் வந்தால் கூட பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட தொடங்கி உள்ளனர்

இந்நிலையில் முழுவதுமாக டெங்குவிலிருந்து விடுபடுவதற்குள் மேலும் ஒரு அதியச கொசு ஆரணி அருகே உற்பத்தி ஆகி உள்ளது.

அதிசய கொசு

ஆரணி அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் பூபாலன். இவர் வீட்டில் இரவு நேரத்தில் மின்சாரம் கட்டான நேரத்தில் தூக்கம் இல்லாமல் கண்விழித்து கொண்டிருக்கும் போது அவருடைய கால் பகுதியில் பலமாக கடிப்பதை உணர்ந்து கையால் தட்டிவிட்டு பார்த்துள்ளார்

பயமுறுத்தும் கொசுவின் தோற்றம்

அப்போது மிகவும் பெரிய அளவில் இருக்கும் கொசு கடித்துள்ளது.இதனால் பயந்துபோய் அந்த அரிய வகை கொசு பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்து உள்ளார். பின்னர் பொது மக்கள் மத்தியில் காண்பித்தபோது அந்த அரிய வகை கொசுவைக்கண்டு மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கொசுக்கள் அதிகரிப்பால் டெங்கு நோய்கள் அதிகரித்து வரும் இந்த வேலையில் இந்த அரிய வகை கொசுக்களாள் என்ன விதமான நோய்கள் வருமோ என அச்சத்தில் உள்ளனர். மக்கள்

இதனை கருத்தில் கொண்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த அரிய வகை கொசுவால் அப்பகுதி மக்கள் மன நிம்மதியை இழந்துள்ளனர் என்றே கூறலாம்