வங்கக்கடலில் "SITRANG" புயல் உருவாகிறது.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக்கடலில் பகுதியில் புயல் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமணடல் மேலடுக்கு சுழற்சி கடந்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை.. இன்று எந்தெந்த பகுதியில் கனமழை..? வானிலை அப்டேட்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி பின்னர் புயலாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.22 ஆம் தேதி க்கு பிறகு Sitrang புயல் வங்க கடலில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மத்திய மற்றும் மேற்கு பகுதியில் இந்த புயல் நிலைக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி புயலாக மாற வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் புயல் நகரும் பாதை இதுவரை கணிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியான பிறகு இதன் பாதை கணிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது
மேலும் படிக்க:போடிமெட்டு சாலையில் திடீரென ஏற்பட்ட நீர் வீழ்ச்சி..! வெள்ளப்பெருக்கால் போக்குவரத்திற்கு தடை