MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

மோடி, அமித்ஷா பருப்பு தமிழ்நாட்டில் வேகாது..! உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

மோடி - அமித்ஷா பருப்பு வட மாநிலங்களில் வேகலாம். தமிழ்நாட்டில் வேகாது. இந்த தேர்தல் தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்குமானது. சமூக நீதிக்கும் - அநீதிக்கும், தமிழ் மொழிக்கும் - இந்தி திணிப்புக்கும் இடையே நடக்கும் தேர்தல் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Velmurugan s
Published : Feb 16 2026, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு
Image Credit : Asianet News

திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு இளைஞரணி செயலாளரும் - துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளை சேர்ந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணியில் 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் எந்த அரசியல் கட்சி சார்பு அணிக்கும் இப்படி வலிமையான கட்டமைப்பு கிடையாது. இன்று பல கட்சிகள் பூத் கமிட்டி அமைக்க ஆள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றன.

24
திராவிட மாடல் சாதனையை நாடே பாராட்டுகிறது
Image Credit : Asianet News

திராவிட மாடல் சாதனையை நாடே பாராட்டுகிறது

திராவிட மாடல் அரசின் திட்டங்களை ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்த்து பாராட்டி வருகிறது. மீண்டும் தமிழகத்தில் அமையப் போவது தி.மு.க. 2.0 அரசு தான். அப்போது மகளிருக்கான உரிமைத்தொகையை ஆயிரத்தில் இருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவேன் என முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி அளித்துள்ளார். இதனால், ஒட்டுமொத்த சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் கதறிக் கொண்டிருக்கிறது.

Related Articles

Related image1
பத்து தோல்வி பழனிசாமி, மொத்த தோல்வி மோடி.. மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.. உதயநிதி
Related image2
“இரைக்குது” ஒரு செகண்ட் கேப் விட்டு… திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்.. அதிர்ந்த அரங்கம்
34
மோடியின் பருப்பு தமிழகத்தில் வேகாது
Image Credit : x

மோடியின் பருப்பு தமிழகத்தில் வேகாது

தமிழக சட்டசபை தேர்தல் வரவுள்ளதால் அடிக்கடி சங்கி கூட்டம் வரும். மோடி, அமித்ஷா அடிக்கடி வருவார்கள். ஆனால், தமிழகத்திற்கு தேவையான நிதி மட்டும் வராது. உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் மோடி, அமித்ஷாவின் பருப்பு வேகலாம். ஆனால் தமிழகத்தில், ஒருபோதும் வேகாது. பா.ஜ.க - அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்துள்ள தலைவர்களை, யோசித்து பாருங்கள்.

பஞ்சரான டயர்கள்..

பழனிசாமியுடன் கூட்டணியில் இருப்பதற்கு தூக்கில் தொங்கி விடலாம் என ஒருவர் கூறினார். பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது. கவுன்சிலராக வருவதற்குக் கூட தகுதி கிடையாது, “டயர் நக்கி” என ஒருவர் கூறினார். இந்த நிலையில் தமிழகத்திற்கு, டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும் என பிரதமர் மோடி கூறுகிறார். பிரதமர் மோடி, உங்கள் கூட்டணி வண்டியை பாருங்கள், கூட்டணியில் உள்ள அனைவரும் பஞ்சரான டயர்கள். உங்களுடைய பஞ்சரான டயர்களும், ஃபங்ஷன் ஆகாத டப்பா இன்ஜினும் தமிழ்நாட்டில் என்றைக்கும் ஓடவே ஓடாது.

44
யாருக்கும் பயன் இல்லாத கோஷ்டி
Image Credit : Asianet News

யாருக்கும் பயன் இல்லாத கோஷ்டி

இன்னொரு பக்கம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் ஒரு கோஷ்டி சுற்றிக்கொண்டிருக்கிறது. கொள்கை, லட்சியம், கோட்பாடு எதுவும் இல்லாமலும் தெரியாமலும் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் ஒரு என்டர்டெயின்மென்ட் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். அரசியல் என்பது மக்கள் பணி; அது ஒரு கமிட்மெண்ட், டெடிகேஷன் என்பதை தி.மு.க.வினர் காட்ட வேண்டும். கமிட்மெண்ட், டெடிகேஷன் இல்லாமல் யாராலும் சாதிக்க முடியாது. பாசிசத்தையும் அடிமைத்தனத்தையும் விரட்ட வேண்டும். டெல்லிக்கும் தமிழகத்திற்கும் நடக்கும் போர் தான் தமிழக சட்டமன்ற தேர்தல். சமூக நீதிக்கும் - சமூக அநீதிக்கும் இடையே நடக்கும் தேர்தல். தமிழுக்கும் - இந்தி திணிப்புக்கும் இடையே நடக்கு தேர்தல். இந்த போரில் முன்கள பணியாளர்கள் இளைஞரணி தான். தமிழகம் என்றும் டெல்லிக்கு தலைகுனியாது என்பதை நிரூபிக்க வேண்டும். நம்மிடம் சாதனையும் வரலாறும் உள்ளது.

அரசியல் அறிவே இல்லாத அடிமைகளும் அட்டைகளும் புலம்பினாலும், வெற்றி பெறுவது உதயசூரியன் சின்னம். 200 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உதயநிதி ஸ்டாலின்
மு. க. ஸ்டாலின்
திமுக
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்ரா வெடிய.. இனி 6ம் வகுப்பு முதல் இலவச லேப்டாப்..! முதல்வர் அதிரடி அறிவிப்பு
Recommended image2
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image3
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Related Stories
Recommended image1
பத்து தோல்வி பழனிசாமி, மொத்த தோல்வி மோடி.. மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.. உதயநிதி
Recommended image2
“இரைக்குது” ஒரு செகண்ட் கேப் விட்டு… திமுகவின் திட்டங்களை பட்டியலிட்டு மரண மாஸ் காட்டிய ஸ்டாலின்.. அதிர்ந்த அரங்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved