a college girl did suicide in selam

சேலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில் ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயின்று வருபவர் மஞ்சு. இவருக்கு வயது 20. 

இளநிலை படிப்பான பிஎஸ்சி மைக்ரோ பையாலஜி படிப்பை படித்து வரும் இவர் வால்பாறையை சேர்ந்தவர். இவர் அரசு கல்லூரி விடுதியிலேயே தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த சக மாணவிகள் உடனடியாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மஞ்சுவின் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா...? அல்லது சக மாணவிகளுடன் ஏதாவது பிரச்சனையா அல்லது வேறு எதாவது காரணமா என்ற பாணியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.