தாய்ப்பால் குடிக்கும்போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் நைனார் மண்டபத்தைச் சேர்ந்தவர், பாஸ்கரின் மாணவி பவானி என்பவருக்கு கடந்த 6 நாள்களுக்கு முன், மருத்துவமனையில் அவருக்கு பெண்குழந்தை பிறந்தது.

உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் பவானி. அங்கு, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென பேச்சு மூச்சற்று குழந்தை மயங்கிவிழுந்தது. பதறித்துடித்த பவானி, சத்தமாகக் கத்தியவாறே உறவினர்களை அழைத்தார். குழந்தையின் நிலையைப் பார்த்த உறவினர்கள் உடனே காரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.

ஆனால், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர், பாஸ்கருக்கும் பவானியும் அதிர்ச்சியில் பச்சிளம் குழந்தையைப் பறிகொடுத்துவிட்ட நிலையில் கதறிஅழுத பவானி மயங்கி விழுந்தார்.

அதையடுத்து, பிரேதப் பரிசோதனை முடித்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை சோதனை செய்து பார்த்ததில் தாய்ப்பால் குடிக்கும்போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே குழந்தை இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தனர் மருத்துவர்கள்.

பச்சிளங்குழந்தை தாய்பால் கொடுக்கும்போது மூச்சு திணறி உயிரிழந்த சம்பவத்தால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.