நாளை முக்கிய தீர்ப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் பிரிவில் வழக்கு பதிவு - கலக்கத்தில் திமுக தலைமை.!
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, கரூர், ஈரோடு, கோவையில் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜிவீட்டில் கடந்த 13-ம் தேதி அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இதனால், ஏற்கெனவே 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், மீண்டும் அமலாக்கத்துறை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாகவும் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அசோக்குமாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறையினர் ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த சம்மனை ஏற்ற அசோக்குமார், இரு முறையும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், ஜூலை 27 ஆம் தேதிவிசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமான வரித்துறையினர் சம்மன் அனுப்பிஉள்ளனர். இந்த சம்மனுக்கும் அவர் ஆஜராகவில்லை எனில், நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறையினர் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவுப்படுத்தி உள்ளனர் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். செந்தில் பாலாஜி மீது பணமோசடி பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை எதிர்த்தும், அவர் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். அடுத்தடுத்து அதிரடிகளால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக தலைமைக்கு இது பெரும் தலைவலியை கொடுத்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அண்ணன் மகனை வழிக்கு கொண்டு வந்த பாஜக.. 2009 பிரச்சனை தான் காரணமே.! பரபர திருப்பம்