Asianet News TamilAsianet News Tamil

மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளம்..! சென்னையில் இடிந்து விழுந்த கடைகள்- அதிர்ச்சியில் பொதுமக்கள்

மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தால், கட்டிடத்தின் கீழ் இருந்த மண் சரிந்து 10க்கும் மேற்பட்ட கடைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பிற்காக அந்த பகுதியை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

A building collapsed in Chennai due to a ditch dug for rainwater drainage
Author
First Published Jul 16, 2023, 10:38 AM IST

மழைநீர் வடிகால்- தோண்டப்பட்ட பள்ளம்

மழை காலத்தில் சென்னை நகரில் பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு தனி குழு அமைத்து மழை நீரை தேங்காமல் இருக்க திட்டம் வகுத்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.  வட சென்னை பகுதியான  திரு வி க நகர் தொகுதிக்குட்பட்ட , பட்டாளம் கே எம் கார்டன் பகுதியில்,  49.80 லட்சம் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைக்கும் பணி,  49. 50 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடம் மற்றும் கழிப்பிடம் கட்டும் பணி மற்றும் சச்சிதானந்தம் தெருவில் 27.80 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையம் கட்டும் பணி உள்ளிட்ட 2 கோடியே 30 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

A building collapsed in Chennai due to a ditch dug for rainwater drainage

கடைகள் இடிந்து விழுந்து சேதம்

இதே போல தென் சென்னை பகுதியிலும் மழை நீர் வடிகால் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தநிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஜெயின் கோவில் அருகே அருணாச்சலம் தெருவில் உள்ள பகுதியில் மழை நீர் வடிகால் அமைக்கும் படி நடைபெற்று வருகிறது. அதற்காக பள்ளம் தோண்டும் போது கட்டிடத்தின் அருகில் பள்ளம் தோன்றியிருக்கின்றனர். இதனால் கட்டிடத்தின் திறத்தன்மை குறைந்து வணிக கடைகளில் முன்புறம் இடிந்து விழுந்துள்ளது. தற்பொழுது வரை எந்த சேதமும் ஏற்படவில்லை. இருந்த போதும் பொதுமக்கள் யாரும் கட்டிடத்தின் அருகே செல்லாமல் இருக்க பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதையும் படியுங்கள்

வடசென்னை பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் புதிய திட்டம்..! செப்டம்பர் மாதம் நிறைவடையும்- சேகர்பாபு நம்பிக்கை

Follow Us:
Download App:
  • android
  • ios