சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு...! குற்றவாளிகளை காட்டிக்கொடுத்த செல்போன் சிக்னல்
சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கின் போது குற்றவாளிகள் வெளியூரில் இருந்ததாக கூறி வந்த நிலையில் செல்போன் சிக்னல் மூலமாக சம்பம் நடைபெற்ற இடத்தில் குற்றவாளிகள் இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தந்தை மகன் கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் தொடரடப்பட்ட கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
பிஎஸ்என்எல் அதிகாரி சாட்சி
இந்த வழக்கில் நேற்று மிக முக்கியமான சாட்சியான BSNL இல் DGM ஆக இருக்கும் அதிகாரி திலகவதி ஆஜராகி இவ்வழக்கில் செல்போன் பதிவுகள் பற்றி சாட்சியம் அளித்தார். ஏற்கனவே சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அனைவரும் சம்பவத்தன்று வெளியூரில் இருந்ததாகவும் மற்றும் வேறு பணியில் இருந்ததாகவும் கூறி வந்த நிலையில் செல்போன் டவரில் கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் சாத்தான்குளத்தில் தான் இருந்தார்கள் என்பது BSNL-DGM திலகவதி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மேலும் இந்த வழக்கில் கடைசியாக சிறைக்கு கொண்டு செல்லும்போது தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ் தாயார் செல்வராணியுடன் செல்போனில் தாங்கள் போலீஸாரால் கடுமையாக தாக்கப்பட்டதை வலி வேதனையுடன் பேசிய பதிவுகளுக்கான செல்போன் அழைப்புகள் தொடர்பாகவும் திலகவதி சாட்சியம் அளித்ததன் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாட்சியம் இந்த இவ்வழக்கில் மிக முக்கியமாக கருதப்படுகிறது. தொலை தொடர்பு அதிகாரியின் சாட்சியத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி அடுத்த கட்ட விசரனைக்காக வரும் 26 ஆம் தேதி தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்