வேலைக்கு சென்ற இடத்தில் சிறுமியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்து கற்பமாக்கிய சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள  ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி ராசாத்தி. கூலி தொழிலாளிகள். இவர்களது மகள் ஷர்மிளா.

ஷர்மிளா, கடந்த ஒரு வருடமாக பள்ளிக்கு செல்லாமல், வீட்டு வேலை செய்து வந்துள்ளார். அதேபகுதிக்கு கடந்த 4 மாதத்துக்கு முன், மதுராந்தகம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ராம் என்பவர், மரம் வெட்டும் வேலைக்கு வந்துள்ளார். ஷர்மிளாவை பார்த்ததும் அந்த கிராமத்திலேயே தங்கியுள்ளான்.

இந்நிலையில் ஷர்மிளாவின் பெற்றோர் காலை வேலைக்கு சென்றால் மாலை அல்லது இரவு தான் வீட்டிற்கு வருவார்கள் என கூறப்படுகிறது. இதனால், ஷர்மிளா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாள். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு, ராம்க்கும், லாவண்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த   ராம் அடிக்கடி ஷர்மிளா வீட்டிற்கு சென்று பேசியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், திடீரென்று சில நாட்களுக்கு முன் ஷர்மிளா கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாள். அவர்கள் ஷர்மிளாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ததில், ஷர்மிளா கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. 

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த ஷர்மிளாவின் பெற்றோர், என்ன நடந்தது எப்படி கர்பமானாய் என கேட்டதற்கு ஷர்மிளா ராம் தன்னை காதலித்து ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்ததாக கூறியுள்ளாள். இதையடுத்து ஷர்மிளாவின் பெற்றோர் உத்திரமேரூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராம்மை வலைவீசி தேடி வருகின்றனர்.