திடீரென மேலெழுந்த புதைக்கப்பட்ட சடலம்..! அதிர்ச்சியில் ஈரோடு மக்கள்..! காரணம் என்ன..?

ஈரோடு மாவட்டம் பாசூரில் ஒரு மாதத்திற்கு முன் காவிரி ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்ட விவசாயியின் சடலம் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு மீண்டும் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

A body buried in a flood in the Erode river came out causing a stir

ஈரோடு மாவட்டம் பாசூர் காவிரி ஆற்று தடுப்பணை அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதலில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி யாரோ ஒருவர் இறந்து இருக்கலாம் என நினைத்திருந்தனர். அப்போது சடலத்தின் கை, கால் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார்  பாசூரை அருகேயுள்ள செங்கோடம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி துரைசாமி,  கடந்த மாதம் 25 ம் தேதி உயிரிழந்துள்ளார். அவரது உடலை, ஆற்றின் ஓரத்தில் உள்ள மயானத்தில் உறவினர்கள் அனைத்து காரியங்களையும் நிறைவேற்றி புதைத்துள்ளனர். 

சூடு பிடிக்கும் வழக்கு ..! கொடநாடு பங்களாவில் மீண்டும் ஆய்வு.? சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரில் விசாரணை

A body buried in a flood in the Erode river came out causing a stir

இந்நிலையில் கடந்த சில தினங்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மயானத்தில் தண்ணீர் புகுந்து அங்கிருந்த மண் அரிக்கப்பட்டது. இதில் நேற்று மாலை துரைசாமி சடலம் வெளியே அடித்து வரப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் திகைத்து நின்றனர். அப்போது துரைசாமியின் மகன் உதயகுமாரிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர். அதன் பின்னர் மீண்டும் சடலத்தை குழி தோண்டி மறு அடக்கம் செய்தனர். புதைக்கப்பட்ட சடலம் ஒரு மாத காலத்திற்கு பின் மீண்டும் வெளியே வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்

நடுக்கடலில் காணமல் போன குமரி மாவட்ட மீனவர்கள்..! ஒரு வாரம் ஆகியும் பதில் இல்லை..? கோரிக்கை விடுக்கும் சீமான்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios