சூடு பிடிக்கும் வழக்கு ..! கொடநாடு பங்களாவில் மீண்டும் ஆய்வு.? சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரில் விசாரணை

கொடநாடு கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி டிஜிபி நேரில் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

The CBCID police will conduct an in person investigation in Ooty regarding the Koda Nadu murder case

கொடநாடு கொலை வழக்கு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான 950 எக்கர் தேயிலைத் தோட்டம் மற்றும் பங்களா கொடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்குள்  நுழைந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் என்பவரை கொலை செய்தது. அத்துடன் பங்களாவிற்குள் சென்று ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்த பல்வேறு ஆவணங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சாயன், வாளையார் மனோஜ், தீபு, சந்தோஷ் சாமி, ஜித்தன் ஜாய், ஜெம்சீர் அலி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

சென்னை மக்களே உஷார்.. இன்று முதல் புதிய அபராதம் தொகை அமலுக்கு வந்தது..!

The CBCID police will conduct an in person investigation in Ooty regarding the Koda Nadu murder case

316 பேரிடம் தனிப்படை விசாரணை

இந்த கொடநாடு கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்று ஒரே மாதங்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலம் ஆத்தூர் பகுதியில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அதேபோல் இரண்டாவது குற்றவாளியாக கருதப்பட்ட கேரளாவை சேர்ந்த சாயன்  குடும்பத்துடன் கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் போது மர்ம வாகனம் மோதியதில் சாயன் மனைவி மற்றும் அவரது குழந்தை துடிதுடித்து உயிரிழந்தனர். இதனையடுத்து  மேற்கு மண்டல ஐஜி சுதாகர் மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த 8 மாதத்திற்கு மேலாக சேலம், ஈரோடு, கோவை உட்பட கேரளா ,கர்நாடகா போன்ற பகுதிகளில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சசிகலா, கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன்,  கோடநாடு எஸ்டேட்  தற்கொலை செய்து கொண்ட கணினி பொறியாளர் உட்பட 316 சாட்சங்களிடம் மேற்கொண்ட விசாரணை நடைபெற்றது. 

நடுக்கடலில் காணமல் போன குமரி மாவட்ட மீனவர்கள்..! ஒரு வாரம் ஆகியும் பதில் இல்லை..? கோரிக்கை விடுக்கும் சீமான்

The CBCID police will conduct an in person investigation in Ooty regarding the Koda Nadu murder case

கொடநாடு பங்களாவில் சிபிசிஐடி

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார். இதனை தொடர்ச்சியாக கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் வாக்குமூலங்கள் மற்றும் கைப்பற்றபட்ட ஆவணங்களை தனிப்படை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மாவட்ட நீதிபதியிடம் ஒப்படைத்தார்.  இந்தநிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு போலீஸ் துவங்கியுள்ள நிலையில், கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையை நடத்த திட்டமிட்டனர். இதற்காக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் இன்று உதகை இன்று மதியம் வரவுள்ளார். விசாரணையின் அடுத்த கட்டமாக  தனிப்படை போலீசார் நடத்திய 316 சாட்சிகளிடம் சி பி சி ஐ டி சிறப்பு புலனாய்வு போலீசார் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்

கோவை கார் வெடி விபத்து.! பொது வெளியில் கவனமுடன் கருத்து கூற வேண்டும்.! பாஜகவிற்கு சசிகலா அறிவுரை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios