தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காதலிக்க மறுத்த 9-ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கத்தியால் குத்திய கல்லூரி மாணவரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் டி.ராஜகோபாலன்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் நவீன்குமார் (19). இவர் தேனி அருகே தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தாராம்.
இந்த நிலையில் அந்த மாணவியிடம் காதலை கூறியபோது அவர் ஏற்க வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் செவ்வாய்க்கிழமை இரவு அந்த மாணவியை கத்தியால் குத்த முயன்றார். அப்போது மாணவிக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து ஆண்டிபட்டி காவலர்கள் வழக்குப் பதிந்து நவீன்குமாரை தேடி வருகின்றனர்.
