காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 95 சதவீத அதிமுக நிர்வாகிகள் ஒபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் அரியணையை பிடிப்பது யார் என்று ஒபிஎஸ்-ம், சசிகலாவும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுகவின் தொண்டர்களும் சரி, மக்களில் பெரும்பாலானோரும் சரி ஒபிஎஸ்-ஐ ஆதரக்கிறார்களோ இல்லையோ, சசிகலா முதல்வராக கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

ஒருவேளை அதிமுகவிலேயே மூத்த, எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லாத, ஜெயலலிதாவை பெரிதும் மதிக்கும், தமிழக அரசியலை தெளிந்த புலமைக் கொண்ட யாராவது மூன்றாவது நபர் இருப்பின் நிச்சயம் மக்களின் வாக்கு அவருக்காகதான் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் பொலம்பாக்கத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மருத்துவரணி இணைச் செயலர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார்.

சித்தாமூர் ஒன்றிய இலக்கிய அணிச் செயலர் ஆர்.கோபுராஜ் முன்னிலை வகித்தார்.

மாம்பட்டு ஊராட்சி முன்னாள் தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார்.

இந்தக் கூட்டத்தி, காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் அதிமுக நிர்வாகிகளின் ஆதரவு யாருக்கு என்று ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையில், 90 சதவீத அதிமுக நிர்வாகிகள் தங்களது ஆதரவை ஓபிஎஸ்-க்கு தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்தில் ஒன்றிய சிறுபான்மைச் செயலர் ஸ்டாலின், தொழிற்சங்க துணைச் செயலர்கள் பாக்கியநாதன், முத்துலிங்கம், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.