8813 greenhouses have been constructed in Tiruvarur yet - the appointment of the Collector ...
திருவாரூர்
திருவாரூரில் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் 2011–ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 ஆயிரத்து 813 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன என்று ஆட்சியர் நிர்மல்ராஜ் கூறினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில, “கிராமப் புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்காக சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
பயனாளியின் தற்போதைய வீடு இருக்கும் இடத்திலோ அல்லது அதே ஊராட்சியில் உள்ள அவருக்குச் சொந்தமான இடத்திலோ பட்டா வைத்திருப்பவர்களுக்கு பசுமை வீடு கட்டி தரப்படுகிறது.
வீடுக் கட்ட ஒதுக்கப்படும் மொத்தத் தொகையான ரூ.2 இலட்சத்து 10 ஆயிரத்தில் வீட்டின் கட்டுமான பணிகளுக்காக ரூ.1 இலட்சத்து 80 ஆயிரமும், சூரிய ஒளி சக்தி விளக்குகள் அமைத்திட ரூ.30 ஆயிரமும் பிரித்து ஒதுக்கப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சூரிய ஒளி சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் 2011–ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 ஆயிரத்து 813 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன” என்று அதில் கூறியிருந்தார்.
