Asianet News TamilAsianet News Tamil

ஜனவரி மாதத்தில் 84 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்... 12 ஆம் தேதி மட்டும் இத்தனை லட்சம் பேர் பயணமா.?

ஜனவரி மாதம் மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ  இரயில்களில் பயணம் செய்துள்ளதாகவும், அதிகபட்சமாக 12.01.2024 அன்று 3,64,521 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்ன மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. 

84 lakh passengers traveled by Chennai Metro train in January KAK
Author
First Published Feb 1, 2024, 11:30 AM IST

மெட்ரோ ரயிலுக்கு பெருகும் ஆதரவு

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும். மெட்ரோ இரயில் பயணிகளுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5 லட்சத்து 28 ஆயிரத்து 914 பயணிகள் மெட்ரோ இரயிலில் அதிகமாக பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

84 lakh passengers traveled by Chennai Metro train in January KAK

ஜனவரி மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது; 01.01.2024 முதல்  31.01.2024  வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ  இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.  அதிகபட்சமாக 12.01.2024 அன்று 3,64,521 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024, ஜனவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 37,43,885 பயணிகள். ஆன்லைன், வாட்ஸ்அப், பயண அட்டைகள், பயணிகள் டோக்கன்  முறையை பயன்படுத்தி 8,792 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 9,02,336 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

84 lakh passengers traveled by Chennai Metro train in January KAK

20% கட்டண தள்ளுபடி

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), Paytm App on PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

முதன் முறையாக புதிய முயற்சி! QRcodeஐ ஸ்கேன் செய்தால் முதல்வர் ஸ்டாலினே அரசின் திட்டங்களை விடியோவாக விவரிப்பார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios