Asianet News TamilAsianet News Tamil

புலனாய்வில் சிறந்து விளங்கிய 8 தமிழக அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சரின் பதக்கம்

2023ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கத்தைப் பெறும் எட்டு தமிழர்களில் 4 பெண்கள் உள்ளனர். மொத்தம் 140 பேருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.

8 Tamilnadu police officers selected for Union Home Minister's Medal for Excellence in Investigation
Author
First Published Aug 12, 2023, 12:10 PM IST

2023ஆம் ஆண்டு புலனாய்வில் சிறந்து விளங்கிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் 140 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதக்கம் 2018 முதல் வழங்கப்பட்டு வருகிறது. குற்ற விசாரணையின் உயர் தொழில்முறை தரத்தை மேம்படுத்துதி, புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்கும் நோக்கத்துடன் இந்தப் பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இந்தப் பதக்கத்தைப் பெறுபவர்களில் சிபிஐயைச் சேர்ந்த 15 பேர், என்ஐஏவைச் சேர்ந்த 12 பேர் இடம்பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 10 பேர், கேரளா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த தலா 09 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 08 பேர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 07 பேர், குஜராத்தைச் சேர்ந்த 06 பேர் உள்துறை அமைச்சரின் பதக்கத்துக்குத் தேர்வாகியுள்ளனர்.

நாங்குநேரி சம்பவம் நெஞ்சைப் பதறச்செய்கிறது... டிடிவி தினகரன் தமிழக அரசிடம் கோரிக்கை

8 Tamilnadu police officers selected for Union Home Minister's Medal for Excellence in Investigation

மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் விசாரணை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். இந்தப் பதக்கம் பெறவுள்ளவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட 22 பெண் காவலர்களும் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து பதக்கம் பெறும் எட்டு பேரில் கே. ரம்யா, ஏ. ரவிக்குமார், ஆர். விஜயா, எஸ்.வனிதா, எஸ்.சரஸ்வதி, எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகிய 6 பேரும் இன்ஸ்பெக்டர்கள்.  இவர்களுடன் கூடுதல் காவல் ஆணையர் (ஏசிபி) விக்டர் எஸ். ஜான், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) ஆர். பொன்கார்த்திக் குமார் ஆகியோரும் பதக்கம் பெற உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios