Asianet News TamilAsianet News Tamil

சிவகாசி அருகே ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் பட்டாசு விபத்து! பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இருவேறு ஆலைகளில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

8 persons killed fire accident while firecracker accident at two places in sivakasi vel
Author
First Published Oct 17, 2023, 3:58 PM IST | Last Updated Oct 17, 2023, 3:58 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த முத்து விஜயன் என்பவருக்குச் சொந்தமான ஆர்யா பட்டாசு ஆலை மாரனேரி தாலுகாவில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் 80க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆலையில் வழக்கம் போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த வேம்பு என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர். விபத்து குறித்து மாரனேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்செந்தூர் கோவில் பிரகாரத்தில் கொலு வைத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதே போன்று சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி ரெங்கபாளையம் பட்டாசு ஆலை முன்பு செயல்பட்ட கனீஸ்கர் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீயில் கருகி உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதனிடையே இருவேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios