கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு

கூடலூர் அடுத்த அல்லூர்வயல் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தவரின் உடலை வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

75 year old man died in nilgiris while attacked by forest elephant

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தொரப்பள்ளி ஒட்டி உள்ள அல்லூர்வயல் பகுதியல் குடியிருந்து வந்தவர் கரும்பன் (வயது 75). இவர் தன் வீட்டிலிருந்து சாலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மூங்கில் புதர்களில் இருந்த காட்டு யானை இவரை ஆக்ரோஷமாக தாக்கியது. இதில் கரும்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் மீது மதுபாட்டில் வீச்சு; காவல்துறை விசாரண 

இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்து காட்டு யானை வனப்பகுதிக்கு சென்றுவிட்டது. இப்பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகின்றது. சாலையின் இருபுறமும் செடிகள் அதிகம் உள்ளதால் எதிர்வரும் விலங்குகள் வருவது தெரியாத நிலை உள்ளதாகவும், இரவு நேரங்களில் இப்பகுதியில் கடந்து செல்வதற்கு தெருவிளக்குகள் கூட இல்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

துபாய்க்கு சென்ற காரைக்கால் நடன மங்கை மர்ம மரணம்; ஆட்சியரிடம் கோரிக்கை

மேலும் இறந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், இனிவரும் காலங்களில் இப்பகுதிக்கு காட்டு யானை உள்ளே துலையாதவாறு அகழி அமைக்கவும் இப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கையாக வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்தவரின் உடலை வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் அரசு அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios