70 lakh setup box for cable TV tender announced by tamilnadu

குறைந்த கட்டணத்தில் தமிழக மக்களுக்கு டி.டி.எச். சேவை(அரசு கேபிள் டிவி) வழங்கவதற்காக 70 லட்சம் செட் டாப் பாக்ஸ்களை வாங்குவதற்காக தமிழக அரசின் அரசு கேபிள் டி.வி. கழகம் இன்று டெண்டர் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் தமிழக அரசின் அரசு கேபிள் டி.வி. திட்டத்துக்கு டிஜிட்டல் உரிமத்தை மத்திய அரசு வழங்கியதையடுத்து, பணிகளை தமிழக அரசு விரைவுப்படுத்தியுள்ளது.

குறைந்த கட்டணத்தில் சிறப்பான கேபிள் டி.வி சேவையைப் பொதுமக்களுக்கு வழங்க அரசு கேபிள் டிவி நிறுவனம், கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, பல காரணங்களில் செயல் இழந்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், அரசு கேபிள் டிவி நிறுவன தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்' என்று பெயர் மாற்றம் செய்தார். இந்த நிறுவனம் வாயிலாக உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் 90-100 சேனல்களை வாயிலாக மக்களுக்கு வழங்கி வருகிறது.

குறிப்பாக, கடந்த 2011-ம் ஆண்டு, 4.94 லட்சம் இருந்த இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, தற்போது, 70.52 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால், கடந்த மாதம் 17-ந்தேதி டிஜிட்டல் உரிமம் வழங்கியது. நாட்டிலேயே மாநில அரசின் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். 

இந்நிலையில், கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு செட் டாப் பாக்ஸ் வாங்குவதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.

அதன்படி, 60 லட்சம் ஸ்டான்டர்டு டெபனிஷன் பாஸ்(எஸ்.டி. பாக்ஸ்) மற்றும் 10லட்சம் ஹை டெபனிசன்(எச்.டி. பாக்ஸ்) என மொத்தம் 70 லட்சம் செட் டாப் பாக்ஸ் வாங்க இன்று தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. ெடண்டர் கோரும் நிறுவனங்கள் வரும் 29-ந்ேததிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளை அனுப்ப வேண்டும். செட் டாப் பாக்ஸ்கில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், 5 ஆண்டுகளுக்குள்ளாக மாற்றித்தரத்தக்கதாக இருக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக செட் டாபா பாக்ஸளை பழுதுநீக்கித் தரவேண்டும். கட்டணம் வசூலிக்க கூடாது.

செட் டாப் பாக்ஸ் சப்ளை செய்யும் நிறுவனங்கள் சென்னையில் மையம் அமைத்து, ஒவ்வொரு தாலுகாவிலும் சேவை கிளைகள் தொடங்க வேண்டும். செட் டாப் பாக்ஸ் குறித்த சந்தேகங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் வாடிக்கையாளர் சேவை மையத்தையும் தமிழ், மற்றும் ஆங்கிலத்தில் தொடங்க வேண்டும். மேலும், செட் டாப் பாக்ஸ் நிறுவனங்கள் எப்போதும் 5 சதவீதம் செட் டாப் பாக்ஸ்களை கையிருப்பாக வைத்து, மாற்றித்தரும்போது, பற்றாக்குறை நிலை இல்லாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.