Asianet News TamilAsianet News Tamil

உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம்..! முதல்வர் அறிவிப்பு...!

7 lakhs alloted to usha family said edapadi palanisami
7 lakhs alloted to usha family said edapadi palanisami
Author
First Published Mar 8, 2018, 3:58 PM IST


திருச்சியில் உயிரிழந்த கர்ப்பிணி பெண் உஷா குடும்பத்திற்கு ரூ. 7லட்சம் நிவாரணமாக வழங்குவதாக முதலவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்

தலைகவசம் இல்லாமல் இருசக்கர வாகனத்தில்  வந்த தம்பதியினரை துவாக்குடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் நேற்று இரவு  கைகாட்டி நிறுத்தியுள்ளனர். அதை கவனிக்காமல் வந்த தம்பதியினரை, மற்றொரு மோட்டார் வாகனத்தில் துரத்தி வந்த போலீஸ்காரர் எட்டி உதைத்துள்ளார்.

திருவெறும்பூர் பெல் ரவுண்டாணா அருகே நடந்த இந்த சம்பவத்தில் தம்பதியினர் கீழே நிலை தடுமாறி விழுந்துள்ளனர். பைக்கில் வந்த கணவன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மனைவி  உஷா சம்பவ  இடத்திலேயே பலியானார். அவர் 3 மாத  கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கர்ப்பிணி மனைவி பலி.

மரணத்திற்கு காரணமான காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் 3000 பேர் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உஷாவை இழந்து தவித்து வரும் அவரது  குடும்பத்தினருக்கு ரூ. 7 லட்சத்தை,முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு  அறிவித்து  உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios