கடலூரில் கெடிலம் ஆற்றில் குளித்த திருமணமான பெண் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் அடுத்த கீழ அருங்குளம் குச்சிபாளையம் கெடிலம் ஆற்றில் திருமணமான பெண் உட்பட 7 சிறுமிகள் குளித்து கொண்டிருந்தனர். அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால், அவர்கள் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்ற போது ஒரே பகுதியை சேர்ந்த 7 பேரும் நீரில் முழ்கி இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனைக்கு வந்த மாவட்ட எஸ்.பி., சக்திகணேசன் உயிரிழந்தவர்களின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மேலும் படிக்க: சூதாட்ட கப்பலை புதுச்சேரிக்குள் நுழைய விடக்கூடாது.. புதுச்சேரி ஆளும் கூட்டணி அதிமுக கடும் எதிர்ப்பு..