சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில்  ரூ.18 லட்சம் மதிப்புடைய 600 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  

600 கிராம் எடையுடைய 2 தங்க பேட்டரி செல்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்போனுக்கு சாா்ஜா் ஏற்றும் பவா் பேங்கிற்குள் பேட்டரி செல்களுக்கிடையே மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிவந்தது.

இதுதொடர்பாக கேரளாவை சோ்ந்த குத்தூஸ் (37) என்ற பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.