Asianet News TamilAsianet News Tamil

திண்டுக்கல் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - தலா ரூ. 1 லட்சம் நிதியுதவி...

six people died in Dindigul accident - Rs. 1 lakh financial assistance
6 people-died-in-dindigul-accident---rs-1-lakh-financia
Author
First Published May 5, 2017, 5:19 PM IST


திண்டுக்கலில் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் கும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அரசு பேருந்து ஒன்று மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி இன்று காலை 9 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பெருமாள்கோவில்பட்டி அருகே சாலையில் பழுதாகி லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.

வேகமாக வந்த அரசு பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios