6 new judges have been appointed in the Madras High Court.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக 6 புதிய‌ நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, ஹேமலதா, பொங்கியப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மாவட்ட நீதிமன்றங்களி‌ன் நீதிபதிகள் 10 பேர் உள்ளிட்ட 21 பேரின் பெயர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யலாம் என கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2017 ஜனவரியில் பட்டியல் அனுப்பப்பட்டது.

 கீழமை நிதிமன்றங்களில் பணியாற்றி வரும் 6 நீதிபதிகளின் பெயர்களை, உயர்நீதிமன்றத்திற்கு கொலிஜியம் குழு அறிவித்திருந்தது.

தற்போது 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 பேர்களின் நியமனம் குறித்த முடிவுகள் வரும் மாதங்களில் தெரியவரும் என தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, ஹேமலதா, பொங்கியப்பன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் 6 பேருக்கும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விரைவில் பதவி பிரமானம் செய்துவைக்க உள்ளார்.