தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என பொதுமக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கூறி வந்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாமும், காவல்துறை இணைந்து தடையை மீறி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடுத்து வந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. கடந்த 13ம் தேதி முதுல் இந்தபகுதிகளுக்கு பஸ்கள் இயக்கவில்லை. பிற பகுதியில் இருந்து வருவோரை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக கடந்த 2 நாட்களாக, பைக், கார், ஆட்டோ ஆகிய வாகனங்கள் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில், இன்று 5வது நாளாக அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.