விழுப்புரம்

விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து தடாலடியாக உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த பாட்டியிடம் இருந்து 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர்களை தப்பி சென்றுவிட்டனர். 

விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகா விநாயகபுரம் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமானுஜம் மனைவி புஷ்பா (70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். 

நள்ளிரவில் இவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தடாலடியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த புஷ்பாவை எழுப்பி அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். 

பின்னர், திருடன், திருடன் என்று புஷ்பா அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர், அவர்களிடம் நடந்ததை கூற, சிறிது தூரம் சென்று மர்ம நபர்களை தேடி பார்த்தனர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லிய. பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 இலட்சமாகும். 

பின்னர், நேற்று காலை இதுகுறித்த வானூர் காவல் நிலையத்தில் புஷ்பா புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள், மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.