திருவள்ளூர் மாவட்டத்தில், ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் 5 மாத குழந்தையை மர்மநபர்கள் தூக்கிச்சென்று,காயப்படுத்தி வீட்டின் முன்பாக போட்டு சென்ற சம்பவம்  அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது   

திருவள்ளூர் மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனர் ராஜன். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர்.இவருக்கு 5 மாத குஷி கைக்குழந்தை உள்ளது. 

இந்த குழந்தையை தூக்கி சென்ற மர்ம நபர்கள்,காது மற்றும் கழுத்தை கீறி காயப்படுத்தி வீட்டின் முன்பு குழந்தையை போட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். அப்போது, குழந்தையின் அழுகை சப்தம் கேட்கவே, பதறிபோய் வெளியில் வந்த பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர் 

குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. இது தொடர்பாக புகார் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர் 

மேலும், தகப்பனை பழி வாங்க குழந்தையை கடத்தப்பட்டு இவ்வாறு செய்யப்பட்டதா..? அல்லது வேறு எதாவது காரணம் இருக்குமோ என்ற பல கோணத்தில் விசாரணையை  தீவிரப்படுத்தி உள்ளனர் போலீசார் 

யாரும் எதிர்பாராத இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி அனைவரையுமே  அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.