பொம்மன்- பெல்லியிடம் புதிதாக ஒப்படைக்கப்பட்ட 5 மாத குட்டி யானை.! திடீரென உயிரிழந்ததால் வனத்துறையினர் கவலை

elephant whisperers ஆவணத்திரைப்படம் ஆஸ்கர் விருது பெற்றதையடுத்து அந்த படத்தில் இடம்பெற்றிருந்த பொம்மன் - பெல்லியிடம் காட்டில் இருந்து பிரிந்த 5 மாத குட்டியானை பராமரிக்க கொடுத்த நிலையில் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் குட்டி யானை உயிரிழந்தது வனத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

5 month old baby elephant handed over to Pomman Belli died

தமிழ்நாட்டின்  முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெல்லி பற்றிய உண்மை கதையை elephant whisperers  என்ற ஆவணப்படத்தை வன புகைப்பட கலைஞர் கார்த்திகியால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்திற்கு சிறந்த ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பொம்மன் மற்றும் பெல்லிக்கு பாராட்டு தெரிவித்து தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்கினார். இந்தநிலையில்  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள கோடுபட்டி அருகே காட்டிலிருந்து தாயைப் பிரிந்த குட்டியானை ஒன்று  அந்தப் பகுதியில் உள்ள 30 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில்  தவறுதலாக விழுந்தது. இதனையறிந்த பொதுமக்களும், வனத்துறையினரும் யானைக் குட்டியை கயிறுகட்டி மேலே தூக்கி காப்பாற்றினர்.

5 month old baby elephant handed over to Pomman Belli died

இந்த குட்டியானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டது. ஆனால்  இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து அந்த 4 மாத யானைக் குட்டியை முதுமலை காப்பகத்திற்கு கொண்டு சென்று பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஆஸ்கர் விருது கிடைத்த தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் இடம்பெற்றிருந்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த யானைப் பாகன் பொம்மன் மற்றும் அவரது மனைவி பெல்லியிடம் வளர்க்க கடந்த 17 ஆம் தேதி வனத்துறை கொடுத்தது. இதனை பொம்மன் மற்றும் பெல்லியும் ஆசையாக பராமரித்து வந்தனர்.  

5 month old baby elephant handed over to Pomman Belli died

இந்தநிலையில் தாயை பிரிந்து குட்டியானை இருந்ததால் உணவானது சரியாக உட்கொள்ளாமல் இருந்துள்ளது. மேலும் தாய்ப்பால்  இல்லாமல் குட்டியானை உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் தெப்பக்காடு முகாமில் இன்று அதிகாலை குட்டியானை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. வயிற்றுப் போக்கு மற்றும் ஒவ்வாமை காரணமாக குட்டி யானை உயிரிழந்ததாக வனத்துறை மருத்துவர்கள் முதல்கட்ட தகவல் அளித்துள்ளனர். குட்டியானை இறந்த சம்பவம் பொம்மன்- பெல்லி தம்பதியை மட்டுமில்லாமல் வனத்துறையினரையும் கவலை அடையவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

ஆஸ்கர் விருது வென்ற பொம்மன்,பெல்லி தம்பதி முதலமைச்சருடன் சந்திப்பு.! தலா ஒரு லட்சம் நிதி உதவி வழங்கிய ஸ்டாலின்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios