Asianet News TamilAsianet News Tamil

தீபாவளிக்காக விடிய விடிய இயங்கும் சிறப்பு பேருந்துகள்... 2 நாளில் 5 லட்சம் பேர் பயணம்!!

தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் கடந்த 2 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. 

5 lakh people travel in 2 days in govt bus for diwali
Author
First Published Oct 23, 2022, 6:09 PM IST

தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் கடந்த 2 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் இருந்து 10 ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் வழக்கமாக இயங்கும் 2 ஆயிரத்து 100 பேருந்துகளுடன், ஆயிரத்து 437 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3 ஆயிரத்து 537 பேருந்துகள் கடந்த 21 ஆம் தேதி இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் 3 ஆயிரத்து 300 பேருந்துகள் இயக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 65 லட்சம் பேர் பயணித்தனர்.

இதையும் படிங்க: தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவது எப்போது? அன்புமணி ராமதாஸ் கேள்வி!!

அதேபோல், நேற்றைய தினம் சென்னையிலிருந்து வழக்கமான   பேருந்துகளுடன் ஆயிரத்து 808 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 440 பேர் பயணம்  செய்துள்ளனர். ஒட்டு மொத்தமாக கடந்த 2 நாளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 21 ஆம் தேதி சென்னையிலிருந்து ஆயிரத்து 350 ஆம்னி பேருந்துகளில் 48 ஆயிரத்து 600 பேரும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல 510 ஆம்னி பேருந்துகளில் 18 ஆயிரத்து 360 பேரும் பயணம் செய்துள்ளனர். அதேபோல், நேற்று சென்னையிலிருந்து 902 ஆம்னி  பேருந்துகளில் 32 ஆயிரத்து 500 பயணிகளும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல 486 ஆம்னி பேருந்துகளில் 17 ஆயிரத்து 500 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவையில் கோவில் அருகே மர்மமான முறையில் சிலிண்டர் வெடித்து விபத்து.. சென்னையில் கூடுதல் பாதுகாப்பிற்கு உத்தரவு.

ஒட்டுமொத்தமாக ஆம்னி பேருந்துகளில் இரண்டு நாட்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 960 பயணம் மெற்கொண்டுள்ளனர். கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், பேருந்து நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு பெறுவோரிடம் அதிக கட்டணம்   வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதுபோன்ற   விதிமீறல்களை வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்   அடங்கிய குழுக்கள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios