தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர்களுக்கு மாதந்தோறும் 4வது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

ஊதிய உயர்வு கோரி மின்வாரிய ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் தங்கமணி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கூட்டதிற்கு பின்,செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி,

“மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக சிஐடியூ உள்ளிட்ட 17 தொழிற்சங்கத்தினரிடமும் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் இறுதியாகும் சூழலில் உள்ளது. விரைவில் மின்வாரிய ஊழியர்கள் 90,000 பேர் 2.57% ஊதிய உயர்வு பெறுவார்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி , மின்வாரிய  ஊழியர்களுக்கு இனிமையான  செய்தியை  தெரிவித்தார்

அதில்,மாதந்தோறும்  4வது சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படும் என  தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பால் மின்வாரிய ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.