தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 480 கோடி ரூபாய் புதிய ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தென் மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார்.

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து 10-ஆம் தேதி முதல் வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி, தமிழகத்தில் முதல் நாளான இன்று மட்டும் புதிய ரூபாய் நோட்டுகள் 480 கோடி ரூபாய் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும், மொத்தம் 270 பெட்டிகளில் இந்த பணம் கொண்டுவரப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தென் மண்டல இயக்குநர் தகவல் தெரிவித்தார்.