தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்..! மதுரை,திருச்சி காவல் ஆணையர்களும் மாற்றம்
தமிழகத்தில் மதுரை, திருச்சி, திருப்பூர் மாவட்ட காவல் ஆணையர்கள் உட்பட 45 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
45 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்தர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில், திருப்பூர் மாநகர் காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக நரேந்திரன் நகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்திய பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மகேஷூக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி, உளவுத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.பி. பகலவனுக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி, காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி அருண், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
காவல் ஆணையர்கள் மாற்றம்
ஊழல் கண்காணிப்பு துறையின் ஐஜி கல்பனா நாயக், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு காவல்துறை பயிற்சி மையத்தின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிபி சக்ரவர்த்திக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட எஸ்.பி. மனோகரனுக்கு டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி, சென்னை காவல்துறை தலைமையகத்தின் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் எஸ்.பி. மணி தாம்பரம் காவல் ஆணையரகத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு
ஐபிஎஸ் அதிகாரி நரேந்திரன் நாயருக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி மதுரை மாநகர ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்.பி. அதிவீரபாண்டியன், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை எஸ்.பி. செந்தில்குமார் திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர ஆணையர் அபிநவ் குமாருக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி, திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர் துணை ஆணையரான திஷா மிட்டலுக்கு, டிஐஜியாக பதவி உயர்வு வழங்கி சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்