தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில், கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய், ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பெரும் தொண்டர்கள், ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. இதன் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது.
போலீசார் 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருந்தனர், அதில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய நிபந்தனையாக இருந்தது இருந்த போதும் அதிகளவிலான கூட்டம் காரணமாக காலையில் இருந்தே கரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கரூர்-ஈரோடு சாலை வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். கூட்டம் அதிகரித்ததால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. மாற்று வழிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன. த.வெ.க-வின் மருத்துவ வாகனம் கூட நெரிசலில் சிக்கியது. விஜய் பேச்சின் போது இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தபோது, தொண்டர்களுக்கு வழி விடுமாறு அறிவுறுத்தினார், இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்து கொண்டே உள்ளது. இதே போல தனியார் மருத்துவமனையிலும் 30க்கும் மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
