4 killed in car accident near karur

கரூர் அருகே காரின் மீது லாரி மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கரூர் அருகே தென்னிலை நல்லியம்பாளையத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிரே வந்த லாரி காரின் மீது பயங்கரமாக மோதியது.

இதையடுத்து கார் மளமளவென தீப்பிடித்து எரிந்ததில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினரும் போலீசாரும் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்களின் உடல்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.