- Home
- Tamil Nadu News
- July Month School Holidays: காலண்டரை பார்த்து அதிர்ந்த பள்ளி மாணவர்கள்! ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் மட்டும்தான் விடுமுறையா?
July Month School Holidays: காலண்டரை பார்த்து அதிர்ந்த பள்ளி மாணவர்கள்! ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் மட்டும்தான் விடுமுறையா?
School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதன்படி ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை. வார விடுமுறை மட்டுமே வருகிறது.

விடுமுறை என்றாலே குஷி தான்
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பார்கள். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள்
இதனையடுத்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெயில் சுட்டெரித்து வந்ததால் பள்ளிகள் திறப்பை ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அன்றைய தினமே பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டது. பள்ளிகள் திறந்ததும் பள்ளி மாணவர்கள் காலண்டரை புரட்ட ஆரம்பித்துவிட்டனர். அதாவது எந்தெந்த மாதங்களில் எத்தனை நாட்கள் அரசு விடுமுறை வருகிறது என்பதை பார்த்து வருகின்றனர்.
ஜூன் மாதத்தில் விடுமுறை
கடந்த ஜூன் மாதத்தில் 26ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமே அரசு விடுமுறை வந்தது. வார விடுமுறை கணக்கில் எடுத்துக்கொண்டால் சனி, ஞாயிறு என மொத்தம் 8 நாட்கள் விடுமுறை வருகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளி திறப்பு ஜூன் 4ம் தேதி திறந்ததால் 1, 2, 3 என மூன்று நாட்கள் விடுமுறை சேர்த்து மொத்தமாக ஜூன் மாதத்தில் 12 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைத்தது.
ஜூலையில் எத்தனை நாட்கள் விடுமுறை
இந்நிலையில் ஜூலை மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்று பார்த்த பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை. வார விடுமுறை மட்டுமே வருகிறது. அதுவும் எத்தனை நாட்கள் வருகிறது என்பதை பார்ப்போம். ஜூலை 4ம் தேதி சனிக்கிழமை, ஜூலை 5 ஞாயிறுக்கிழமை, ஜூலை 11ம் சனிக்கிழமை, ஜூலை 12ம் ஞாயிறுக்கிழமை, ஜூலை 18ம் சனிக்கிழமை, ஜூலை 19ம் ஞாயிறுக்கிழமை, ஜூலை 25ம் சனிக்கிழமை, ஜூலை 26ம் ஞாயிறுக்கிழமை என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே விடுமுறை வருகிறது.

