இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 38 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதை முன்னிட்டு தமிழக மீனவர்களை விடுவிக்கும் படி இலங்கை அரசு அந்நாட்டு நீதிமன்றத்தை வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 30 பேரும், வவுனியா சிறையில் இருந்து 8 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 

இவர்கள் அனைவரும் இன்று நள்ளிரவில் இந்திய கடரோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து நாளை காலை அல்லது மாலை விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மீனவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை  விடுவிக்க இலங்கை அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.