தமிழ்நாடு அரசு 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர், பால்வளம் மற்றும் பிற துறைகளில் முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். துறை செயலாளர்கள் மாற்றம் செய்யப்படுவது போல் மாவட்ட ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். இந்நிலையில் இன்று 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
38 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் விவரம்
* கால்நடைப் பராமரிப்பு (ம) மருத்துவப் பணிகள் இயக்ககம் முன்னாள் இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐஏஎஸ் தற்போது கைத்தறி துறை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஆ. அண்ணாத்துரை ஐஏஎஸ் தற்போது பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டு ஆணையரகத்தின் ஆணையராகவும் , தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மை இயக்குநராக மாற்றம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
* பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு ஆணையரகத்தின் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் மேலாண்மைக இயக்குநர் சு. வினீத் ஐஏஎஸ் தற்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு சிறப்பு செயலாளராக இருந்த வ.கலையரசி ஐஏஎஸ் தற்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு சிறப்பு செயலாளர்க நியமிக்கப்பட்டுள்ளார்.
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்பு செயலாளராக இருந்த சி. சுரேஷ்குமார் ஐஏஎஸ் தற்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தொழிற்கல்வி இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநராக இருந்த கிரண் குராலா ஐஏஎஸ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* பெரு நகர போக்குவரத்து கழக முன்னாள் மேலாண்மை இயக்குநராக இருந்த மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உறப்பினர் செயலாளராக இருந்த அன்சுல் மிஸ்ரா தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநராக இருந்த மருத்துவர் சு. பிரபாகர் ஐஏஎஸ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த கிராந்தி குமார் ஐஏஎஸ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சேலம் மாநகராட்சி ஆணையரான ரஞ்சித் சிங் ஐ.ஏஎஸ், தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* பொதுத்துறை மற்றும் தனி அலுவலர், தலைமைச் செயலாளரின் அலுவலக அரசு இணைச் செயலாளர் பவன்குமார்க.கிரியப்பனவர் ஐஏஎஸ் தற்போது கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சேரன்மாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் ஐஏஎஸ், ஈரோடு மாவட்டமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவராக நியமனம்.
* சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலாளர், ஹர் சகாய் மீனா ஐஏஎஸ், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா ஐஏஎஸ் , நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.
* தேனி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்.வி. ஷஜிவனா ஐஏஎஸ், தற்போது சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* செங்கல்பட்டு சார் ஆட்சியர் ச.நாராயண சர்மா ஐஏஎஸ், செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவராக நியமனம்
* பொன்னேரி சார் ஆட்சியர் சங்கத் பல்வந்த் வாகே ஐஏஎஸ், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவராக நியமனம்.
* மேட்டூர் சேலம் சார் ஆட்சியர் தே.பொன்மணி ஐஏஎஸ், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவராக நியமனம்
* பொள்ளாச்சி சார் ஆட்சியர் செல்வி அ கேத்தரின் சரண்யா ஐஏஎஸ், தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட அலுவராக நியமனம்.
* பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் சோ. மதுமதி ஐஏஎஸ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளராக நியமனம்.
* மனித வள மேலாண்மை துறை அரசு செயலாளர் சி.சமய மூர்த்தி ஐ.ஏ.எஸ், உயர்கல்வித்துறை அரசு செயலாளராக நியமனம்.
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், மீனவர் நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் சத்திய பிரத சாகு ஐஏஎஸ் , கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு துறை அரசு முதன்மைச் செயலாளராக நியமனம்.
* கூட்டுறவு , உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தமிழ்நாடு மின்வாரியம், மின் பகிர்மான கழகம் மற்றும் தமிழ்நாடு மின்விசை உற்பத்தி கழகம் ஆகியவற்றின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமனம்.
* தமிழ்நாடு மின்வாரியம், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், மின்விசை உற்பத்திக் கழகம் ஆகியவற்றின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் க. நந்தகுமார் ஐஏஎஸ், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக நியமனம்.
* கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மருத்துவர் ந. சுப்பையன் ஐஏஎஸ், கால்நடை பராமரிப்பு, பால்வளம் , மீன்வளம், மீனவர் நலத்துறை அரசு செயலாளராக நியமனம்.
* தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் ஐஏஎஸ், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.
* வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த பிரஜேந்திர நவ்நீத் ஐ.ஏ.எஸ் , தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மைச் செயலாளராக நியமனம்.
* சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளராக இருந்த பா.செந்தில் குமார் ஐஏஎஸ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளராக நியமனம்.
* வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையரக ஆணையர் கோ.பிரகாஷ் ஐஏஎஸ் , மனிதவள மேலாண்மை துறை அரசு செயலாளராக நியமனம்.
* உயர்கல்வித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த மருத்துவர் கே.கோபால் ஐஏஎஸ், சிறப்பு முயற்சிகள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.
* பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் ந.வெங்கடேஷ் ஐஏஎஸ், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் முதன்மைச் செயலாளர் / தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமனம்.
* TAWDEVA துணைத் தலைவராக இருந்த ஜெ.ஜெயகாந்தன் ஐஏஎஸ் பொதுப்பணித்துறை அரசு செயலாளராக நியமனம்.
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ் சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமனம்.
* தமிழ்நாடு, பாண்டிச்சேரி மக்கள் தொகை கணக்கு துறை முன்னாள் இயக்குனர் ச்ஜ்ஜன் சிங் ரா.சவான் ஐ.ஏ.எஸ், பொதுத்துறை அரசு சிறப்பு செயலாளராக நியமனம்.
* நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன் ஐஏஎஸ் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளராக இருந்த மருத்துவர் பி சந்திரமோகன் ஐ.ஏ.எஸ் பள்ளி கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
