310 arrested nutrition staff struggled to pay rises

திருவள்ளூர்

திருவள்ளூரில் ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்பட 310 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சத்தியநாதன் தலைமை வகித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து திரளான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

“சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,

ஓய்வுபெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் ரூ.3500 வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திடீரென திருவள்ளூர் –திருப்பதி சாலையான எம்.ஜி.ஆர். சிலை அருகே மறியல் போராட்டத்தில் அமர்ந்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்பட 310 பேரை காவலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்களின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.