வரும் மார்ச் 30ம் தேதி முதல் தொடர் லாரி ஸ்ட்ரைக் நடைபெறும் என  தமிழ்நாடு லாரி உரிமையளார்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால், வர்த்தகங்கள் பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயரும் அபயாம் உள்ளது.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. அதில், லாரிகளுக்கான காப்பீட்டு தொகையை 58 சதவீதம் உயர்த்தியுள்ளனர். அந்த முடிவை கைவிட வேண்டும்.
வட்டார போக்குவரத்து அலுவலங்களில் ஒப்புதல் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட லாரிகள் பங்கேற்க உள்ளன. தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இதனால் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படும். விலைவாசியும் தாறுமாறாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.