சென்னையில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் 3 பேர் அதிரடியாக கைது..!காரணம் என்ன.? எந்த நாட்டை சேர்ந்தவர்கள்.?
நாடு முழுவதும் என்ஐஏ சோதனை மேற்கொண்டு வந்த நிலையில், போலி ஆதார் அட்டை தயாரித்து சென்னையில் பணியாற்றி வந்தவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
என்ஐஏ சோதனை தீவிரம்
சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தேசிய முகமை கண்காணித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கோவை கார் குண்டு வெடிப்பு, கேரளா குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்களை அதிரடியாக கைது செய்து வந்தது.
இந்தநிலையில் தற்போது நாடு முழுவதும் என்ஐஏ இன்று சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், ஆள் கடத்தல், வணிகம், போலி ஆதார் கார்டு தயாரித்தது தொடர்பாக திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, ஹரியானா, புதுவை, ராஜஸ்தான், ஜம்மு - காஷ்மீர் ஆகிய 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ சோதனை மாநிலங்களில் சோதனை நடத்தினர்.
சென்னையில் 3 பேர் அதிரடியாக கைது
இந்தநிலையில் சென்னையில் நடைபெற்று வரும் என்.ஐ.ஏ சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பையில் நடைபெற்ற சோதனையில் வங்கதேச நாட்டை சேர்ந்த சபாபுதீன் என்பவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. இவர் போலி ஆதார் அட்டை தயாரித்து இந்தியாவில் ஊடுருவி பணி செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் போன்று போலியாக ஆதார் அட்டை தயாரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது. மறைமலைநகர் பகுதியில், ஜூஸ் கடையில் வேலை செய்து வந்த முன்னா, மற்றும் அவருடன் தங்கி இருந்த மியான் ஆகியோரையும் என்ஐஏ கைது செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்