சென்னை வடபழனி பிரியா கொலை வழக்கில் கைதான அவரது கணவர் கோவில் அர்ச்சகரான பால கணேஷ் மற்றும் அவரது நண்பர் மனோஜ் நேற்று கைதாகினர்.

தன் மனைவியை தானே கொன்றுவிட்டு,கொள்ளையர்கள் நகைக்காக தன் மனைவியை கொலை செய்து விட்டு சென்றனர் என நாடகமாடினர் பாலகணேஷ்

பின்னர் கடந்த இரண்டு நாட்களில், போலீசார் நடத்திய குறுக்கு விசாரணையில்  பாலகணேஷ் வசமாக மாட்டிக்கொண்டார்

வடபழனி குருக்கள் பால கணேஷ் சிக்கியது எப்படி தெரியுமா..?

1.இரவு ஒன்றரை மணிக்கு கொளையர்கள் வந்து என்னை அடித்துவிட்டனர்.அப்போது நான் மயங்கிவிட்டேன் என பாலகணேஷ் தெரிவித்து இருந்தார்.

போலீசார் மைன்ட் வாய்ஸ்: ஒன்றரை மணிக்கு நீங்கள் வெளியில் வருவீங்கனு எப்படி கொள்ளையர்களுக்கு தெரியும்.

2. பாலகணேஷ் மீது இருந்த ரத்த மாதிரியும், பிரியாவின் ரத்த மாதிரியும் ஒத்து போயுள்ளது. அதாவது பால கணேசுக்கு ரத்தம் வரவில்லை.

3.இன்னொரு பக்கம், பாலகணேஷ் தவிர்த்து மேலும் ஒருவரின் கைரேகை பீரோவில்  பதிவாகி இருந்துள்ளது. இதனை சோதித்து பார்த்த போது,அது பாலகணேஷ் நண்பர் மனோஜ் என தெரியவந்தது

இந்த மூன்று விவரத்தையும்,முன்னுக்கு முரணான பதிலை கொடுத்து நாடக மாடியது தெரியவந்தது.