Asianet News TamilAsianet News Tamil

இரண்டே நாளில் சென்னையில் இருந்து வெளியூருக்கு பறந்த 3 லட்சம் பேர்.! வெளியான தகவல்

வார இறுதி விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி தினத்தையொட்டி தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை தினத்தின் காரணமாக,  சென்னையில் இருந்து கடந்த இரண்டு தினங்களில் இயக்கப்பட்ட 5ஆயிரத்து 664 பேருந்துகள் மூலம் 3 லட்சம் பேர் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர். 

3 lakh people from Chennai have gone to other places by special bus due to the continuous holiday KAK
Author
First Published Oct 22, 2023, 11:24 AM IST | Last Updated Oct 22, 2023, 11:24 AM IST

சென்னை- தொழில்வளர்ச்சி

வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப வேலைக்காகவும், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காகவும் தினந்தோறும் தலைநகரான சென்னையை நோக்கி பல மாவட்டங்களில் இருந்து படை எடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வந்தோரை வாழவைக்கும் இடமாக சென்னை திகழ்ந்து வருவதால் பிழைப்பு தேடி நாள்தோறும்  லட்சக்கணக்கான மக்கள் சென்னையை முற்றுகையிட்டு வருகின்றனர்.  அவர்களை ஏமாற்றாமல் ஏதாவது ஒரு வகையில் வேலையை வழங்கி வாழ்க்கை நடத்த உதவுகிறது சென்னை. சொந்த ஊரை மறந்து, குடும்பங்களை விட்டு பிழைப்புக்காக சென்னையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு விடுமுறை நாட்கள் கிடைத்தால் மட்டுமே சொந்த ஊருக்கு செல்ல முடியும்.

3 lakh people from Chennai have gone to other places by special bus due to the continuous holiday KAK

நான்கு நாட்கள் தொடர் விடுமுறை

அதுவும் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்றால் கேட்கவே வேண்டியது இல்லை.  எப்படியாவது சொந்த ஊருக்கு பேருந்திலையோ, ரயில் மூலமாகவோ செல்ல வேண்டுமென்று விரும்புவார்கள்,  அதற்கு ஏற்றார் போல் தற்போது சனி, ஞாயிறு, திங்கட்கிழமை ஆயுத பூஜை ,செவ்வாய்க்கிழமை விஜயதசமி என அடுத்தடுத்து நான்கு நாட்கள் விடுமுறை வந்ததன் காரணமாக சென்னையில் பணிக்காக வந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். மேலும் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாக்காகவும் பல்வேறு இடங்களுக்கு மக்கள் சென்றுள்ளனர்.இதனிடையே சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணிகள் செல்லுவதற்கு  வசதிக்காக  தமிழக போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது.  

3 lakh people from Chennai have gone to other places by special bus due to the continuous holiday KAK

இரண்டே நாளில் 3 லட்சம் பேர் பயணம்

அதன்படி கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மூன்று லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் , வார இறுதி நாட்கள்  மற்றும் தொடர் விடுமுறையை (ஆயுதபூஜை) முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (21/10/2022) நள்ளிரவு 1200 மணி நிலவரப்படி சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 813 பேருந்துகளும் ஆக கடந்த   20/10/2023 முதல் 21/10/2023 வரை மொத்தம் 5,664 பேருந்துகள் இயக்கப்பட்டன இவற்றில் 3,00092 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஆயுத பூஜை கொண்டாட்டம்..! உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை- ஒரு கிலோ மல்லிகைப் பூ எவ்வளவு தெரியுமா.?
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios