ஆயுத பூஜை கொண்டாட்டம்..! உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை- ஒரு கிலோ மல்லிகைப் பூ எவ்வளவு தெரியுமா.?

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி தமிழகத்தில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக மல்லிகைப் பூ விலை ஒரு கிலோ 1300 ரூபாயை தொட்டுள்ளது. 

On the occasion of Ayudha Puja jasmine flower prices have increased manifold KAK

ஆயுத பூஜை கொண்டாட்டம்

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மலர் சந்தையில் மல்லிகை - 1300 ரூபாய்க்கும், பிச்சி - 700 ரூபாய்க்கும், முல்லை - 700 ரூபாய்க்கும், அரளி - 500 ரூபாய்க்கும், செண்டு பூ - 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது., இதே போல் கோழி கொண்டை - 50 ரூபாய்க்கும், செவ்வந்தி - 200 ரூபாய்க்கும், சம்பங்கி - 150 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் - 200 ரூபாய்க்கும், துளசி - 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

On the occasion of Ayudha Puja jasmine flower prices have increased manifold KAK

உச்சத்தை தொட்ட பூக்களின் விலை

கடந்த வாரம் வரை மல்லிகை - 300 ரூபாய்க்கும், பிச்சி - 250 ரூபாய்க்கும், முல்லை - 200 ரூபாய்க்கும், அரளி - 100 ரூபாய்க்கும், செண்டு பூ - 10 ரூபாய்க்கும், கோழி கொண்டை - 10 ரூபாய்க்கும், செவ்வந்தி - 30 ரூபாய்க்கும், சம்பங்கி - 30 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் - 40 ரூபாய்க்கும், துளசி - 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஆயுத பூஜையையொட்டி கொண்டாட்டங்களில் பயன்படுத்தக்கூடிய பூக்களான செண்டு பூ, செவ்வந்தி, துளசி உள்ளிட்டவைகளின் விலை கடந்த வாரம் வரை 10 ரூபாய்க்கும் கீழ் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆயுத பூஜையை முன்னிட்டு கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாகவும்,  பண்டிகை காலம் என்பதால் மல்லிகை பூக்களின் விலை கடந்த வாரத்தை விட இரு மடங்கு உயர்ந்து தற்போது 1300 ரூபாய்க்கு ஒரு கிலோ மல்லிகைப்பூ  விற்பனை செய்யப்படுகிறது.

On the occasion of Ayudha Puja jasmine flower prices have increased manifold KAK

மல்லிகை பூ விலை என்ன.?

இதே போல திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. மல்லிகைப்பூ ஒரு கிலோ 1000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ -500ரூபாய், முல்லைப் பூ -600, சம்பங்கி -350,  செவ்வந்தி -300,  செண்டுமல்லி -120, பன்னீர்  ரோஜா -250, பட்டன் ரோஸ் -300, மரிக்கொழுந்து -120, மருகு -120, துளசி -60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. 

இதையும் படியுங்கள்

மகளிர் உரிமைத் தொகை பெரும் பயனாளிகளுக்கு ஷாக் கொடுத்த தமிழக அரசு- வெளியான புதிய அறிவிப்பு
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios