முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் நாசே இலவச தொழிற்பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.

சென்னையில் இயங்கி வரும் நாசே தொண்டு நிறுவனத்தின் சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாசே இலவச தொழிற்பயிற்சி மையம் தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூரில் நேற்று நடந்தது.

இதுகுறித்து அதிகரிகள் கூறுகையில், இந்த நாசே தொண்டு நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இலவசமாக தொழிற்பயிற்சி அளித்து, சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நாசே இலவச தொழிற்பயிற்சி திட்டத்தின் மூலம் திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய பகுதிகளில் சுமார் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளது'' என்றனர்.

புதிதாக தொடங்கப்பட்ட இலவச தொழிற்பயிற்சி மையத்தில் கணினி பயிற்சி, செல்போன் மெக்கானிசம், கைவினைப்பொருட்கள் தயாரித்தல், எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீவைண்டிங், தையல் பயிற்சி உள்பட 15க்கு மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் சேர கட்டணம், கல்வி தகுதி, வயது வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.