- Home
- Politics
- களமிறக்கப்படும் 50000 பெண்கள்... திமுகவின் சீக்ரெட் வேட்டை... கண்ணுக்கு தெரியாமல் மெகா சர்ப்ரைஸ்..!
களமிறக்கப்படும் 50000 பெண்கள்... திமுகவின் சீக்ரெட் வேட்டை... கண்ணுக்கு தெரியாமல் மெகா சர்ப்ரைஸ்..!
திமுக ஏன் இன்னும் பிரச்சாரத்துக்கு போகாமல் இருக்கிறது என்கிற கேள்வி அனைத்து மட்டத்திலும் எழுந்திருக்கிறது. மற்ற கட்சிகளை விட கண்ணுக்கு தெரியாத பவர்ஃபுல்லான ஒரு சில பிரச்சாரங்களை திமுக செய்து கொண்டு இருக்கிறது.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், தமிழகத்தின் சாதனை மலர் வெளியிடவும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த 50,000 பெண்களுக்கு களம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல மாதங்களுக்கு முன்பே பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், திமுக ஏன் இன்னும் பிரச்சாரத்துக்கு போகாமல் இருக்கிறது என்கிற கேள்வி அனைத்து மட்டத்திலும் எழுந்திருக்கிறது. மற்ற கட்சிகளை விட கண்ணுக்கு தெரியாத பவர்ஃபுல்லான ஒரு சில பிரச்சாரங்களை திமுக செய்து கொண்டு இருக்கிறது. திமுக அரசில் கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை, தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் உட்பட எந்தெந்த திட்டங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் போய் சேர்ந்திருக்கிறது?
ஒரே வீட்டில் இருப்பவர்கள் எத்தனை பேர் ஒவ்வொரு திட்டத்தோட பயனாளிகளாகவும் இருக்கிறார்கள்? என்கிற புள்ளி விவரங்களை சேகரிக்க சுமார் 50,000 பெண்களை களத்தில் இறக்கி இருக்கிறார்கள். மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த இவர்கள் ஒரு நாளைக்கு 30 குடும்பங்களை சந்திக்க வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு நாளைக்கு 500 சம்பளம் தரப்படும்.
இவர்கள் கொடுக்கிற தகவல்களின் அடிப்படையில் திமுக அரசின் திட்டங்கள் எத்தனை பேர் குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேரு எந்தெந்த திட்டங்களால் பயனடைந்து இருக்கிறார்கள் என்கிற லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அதையே தமிழக அரசின் சாதனை மலராக வெளியிட திட்டம் போட்டு இருக்கிற திமுக அதே விவரங்களை தனது தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட திட்டமிட்டுள்ளது. அதே போல் இப்போது தொடங்கப்பட்டு இருக்கிற உங்கள் கனவுகளை சொல்லுங்க என்கிற திட்டத்திலும் மாவட்ட வாரியாக மக்களோட கனவுகளை சேகரித்து அதனை நினைவாக்குவதற்கு திமுக 2.0 அரசில் தனித்துறை உருவாக்கப்படும் என தனது தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் சொல்ல இருக்கிறாராம். கிட்டத்தட்ட 2021 பிரச்சாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் போன்றது இது என்கிறார்கள்.
