தமிழக  எல்லைப் பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் குற்றங்கள் தொடர்பாக புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 23 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் இருந்து மது கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் மற்றும் தமிழக எல்லைப்குதியான  பகுதியான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து நடந்து வரும் கொலை, கொள்ளை, சதித் திட்டம் தீட்டுதல் உள்ள குற்ற சம்பவங்களில் புதுச்சேரி மாநில ரவுடிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொலை, கொள்ளை, மணல் கடத்தல், மது கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

மேலும் புதுச்சேரி அமைச்சர் உதவியாளர் கொலை, பாகூர் பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு தலை ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வீசப்பட்டது  உள்ளிட்ட சம்பவங்கள்  தமிழக காவல் துறையினரை அதிர வைத்துள்ளது.

இது போன்ற தொடர் குற்ற சம்பவங்களில் புதுச்சேரி மாநில ரவுடிகள் அதிகளவில் ஈடுபட்டுள்ளதையடுத்து, கடலூர்  மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட காவல் சரகத்தில் புதுச்சேரி மாநில ரவுடிகள் சம்மந்தப்பட்ட குற்ற வழக்குகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

மேலும் இதுபோன்ற குற்ற செயல்களை தடுக்கும் வகையில் புதுச்சேரி ரவுடிகளை கைது செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் ரெய்டு நடத்தப்பட்டது.