20 people arrested by Sivagangai railroad

சிவகங்கை 

சிவகங்கை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதிமூலம், மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர், பா.ம.க.வினர் சிவகங்கை இரயில் நிலையத்திற்குள் புகுந்து இரயில் மறியல் செய்ய முயற்சித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளர் மங்களேசுவரன், நகர ஆய்வாளர் மோகன் ஆகியோர் தலைமையிலான காவலாளர்கள் அவர்கள் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். 

பின்னர், இரயில் மறியல் செய்ய முயன்ற பா.ம.க.வினர் 20 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.